மசாலா பொறி அல்லது காரப்பொறி செய்வது எப்படி? செய்வதற்கு தேவையான பொருட்கள்.
தேவையான பொருட்கள்
1.பொறி
2. கடுகு உளுத்தம் பருப்பு கலவை
3.தேங்காய் எண்ணெய்
4.பூண்டு
5.பெருங்காயம் தூள்
6.கேரட்
7.கருவேப்பிலை
8.மஞ்சள் தூள்
9.கொத்தமல்லி
10.முந்திரி
11.பொட்டுக்கடலை
12.வெங்காயம் மற்றும்
13.வறுகடலை .
செய்முறை
மசாலா பொறி எப்படி செய்வது என்பதை இப்பொழுது நாம் பார்க்கலாம். முதலில் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும், பிறகு கடாயை அடுப்பில் வைத்து கடாய்சூடானவுடன் அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும் எதற்காக தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் கொள்கிறேன் என்றால் அப்போதுதான் மசாலா பொறி அல்லது கார பொறி சுவையாக இருக்கும். எண்ணெய் சூடான பிறகு கடுகு சேர்த்து கடுகு பொரிந்தவுடன் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும் பூண்டு தங்கம் நிறம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
பூண்டு வறுபட்ட உடன் கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும், வதக்கிய பிறகு வறுகடலை சேர்த்துக் கொள்வோம் இரண்டு நிமிடம் மட்டும் வறுத்துக் கொள்வோம். அதன் பிறகு பொட்டுக்கடலை சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்து பெருங்காயப் பொடியை அதனுடன் சேர்த்துக் கொள்வோம், பெருங்காயப் பொடியை எண்ணெயில் சேர்த்து கொள்ளும்போதுதான் நன்கு வாசம் வரும் . இதைத்தொடர்ந்து முந்திரி சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் இவை இரண்டையும் சேர்த்து வறுக்க வேண்டும். கடைசியாக பொரி சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும் . ஏனென்றால் அதிக நேரம் அனலில் இருந்தால் பொரி ருசியாக இருக்காது. பிறகு அனைத்து கலவையும் நன்றாக கலக்கி வைக்க வேண்டும் அப்போது தான் பொறி ருசியாக இருக்கும்.
பொரி கலவையை அடுப்பில் இருந்து இறக்கி கொள்வோம், இறக்கிய பிறகு மசாலா பொரி தட்டில் மாற்றிக்கொண்டு அதில் நாம் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவின கேரட், கொத்தமல்லி இலை. இவை அனைத்தையும் பொரி மேலே தூவிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ருசியான சுவையான மசாலா பொரி என்கின்ற காரப்பொரி தயாராகிவிட்டது இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய மதிய சிற்றுண்டி தயாராகிவிட்டது இவை நீங்கள் ஆக அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடலாம்.
வணக்கம்
ConversionConversion EmoticonEmoticon