துளசியின் பயன்கள் | துளசி இலையின் மருத்துவ குணங்கள்

துளசியின் பயன்கள் :

துளசிச் செடியில் இலை, பூக்கள் அனைத்தும் மருத்துவ குணங்களை கொண்டவை. துளசி செடி ஆயுர்வேத மருந்துகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இலைகள் மற்றும் பூக்களில் எண்ணற்ற பயன்கள் கொண்டவையாக இருக்கின்றன. அனைத்து வீடுகளிலும் துளசி மாடம் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. உங்கள் உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளன.


துளசியின் பெயர்கள்

துளசிக்கு பல்வேறு விதமான பெயர்கள் உண்டு அவை ஸ்ரீ துளசி,
கிருஷ்ண துளசி, ராம துளசி, துழாய், திவ்யா, பிரியா, விஷ்ணுபிரியா போன்ற பல்வேறு பெயர்களும் துளசியைக் கொண்டு அழைப்பார்கள்.

துளசி இலையின் மகிமை

துளசி இலை தொண்டை புண் உள்ளவர்கள் துளசி இலையை பறித்து அதனை நீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் சரியாகிவிடும் மற்றும் காய்ச்சல் ஏற்படும் போது அதனை சரிசெய்ய துளசி இலையை பறித்து அதனை நன்கு மென்று அதில் வரும் சாற்றை விழுங்கினால் காய்ச்சல் குணமாகிவிடும்.

துளசியின் மருத்துவ குணங்கள்

உடலில் சூடு அதிகரிக்கும்போது உடலிலுள்ள வெப்பம் அதிகமாகிவிடும் அதனால் தலைவலி ஏற்படும் அப்பொழுது துளசி இலையை பறித்து அதனுடன் சந்தனப் பொடியை கலந்து இரண்டையும் சேர்த்து அம்மியில் அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி சரியாகி விடும் மற்றும் உடலிலுள்ள வெப்பம் குறையும்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சளி மற்றும் இருமல். அப்போது அதனை சரிசெய்ய துளசி இலையை பறித்து துளசி இலை நன்கு மென்று சாப்பிட்டால், காய்ச்சல் மற்றும் இருமல் சரியாகிவிடும்.

இதய நோய் உள்ளவர்கள் துளசியை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் இதயம் சரியாகி செயல்பட உதவும். சிறுநீர் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் சிறுநீர் கற்களை சரிசெய்ய துளசி இலையின் சாற்றை எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கற்கள் சரியாகிவிடும் மற்றும் சிறுநீர் பாதையில் தொற்று தொற்றுகள் ஏற்பட்டால் அதனை சரிசெய்ய துளசி இலை மிகவும் பெரிதாக பயன்படுகிறது.

குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் இருந்தால் துளசி இலையில் சாறு மற்றும் தேன் சிறிதளவு இஞ்சி இவை மூன்றையும் சேர்த்து ஒரு டீஸ்பூன் காலை மதியம் இரவு மூன்று வேளையும் கொடுத்து வந்தால் சளி சரியாகிவிடும்.

இதை நீங்க வீடியோ வடிவில் பார்க்க கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து பார்க்கவும்.






நன்றி வணக்கம்

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng