தம் பிரியாணி செய்முறை, இனி வீட்டிலேயே செஞ்சிடலாம் பிரியாணி

தம்  பிரியாணி செய்முறை, இனி வீட்டிலேயே செஞ்சிடலாம் பிரியாணி

IIngrediants (தேவையான பொருட்கள்):

1.chicken leg 1 kg (கோழிக்கால்),
2.Big onion 4 (பெரிய வெங்காயம்),
3.Tomato 6 (தக்காளி),
4.Lemon 1 (எலுமிச்சை),
5.Mint (புதினா),
6.coriander (கொத்தமல்லி),
7.bay leaf (பிரியாணி இலை),
8.star Anise (அன்னாசி பூ),
9.cinnamon (இலவங்கப்பட்டை),
10.cloves (கிராம்பு),
11.cardamom (ஏலக்காய்),
12.Dried Kopok Buds (உலர்ந்த கோபோக் மொட்டுகள்),
13.Fennel Seeds (பெருஞ்சீரகம் விதைகள்),
14.Ginger Garlic Paste (இஞ்சி பூண்டு விழுது),
15.chilli powder (மிளகாய் தூள்),
16.Turmeric powder (மஞ்சள் தூள்),
17.Biryani masala powder (பிரியாணி மசாலா தூள்),
18.Ghee (நெய்),
19.curd (தயிர்),
20.Green Chilli (பச்சை மிளகாய்),
21.salt (உப்பு)
22.Oil (எண்ணெய்),
23.Ponni rice (பொன்னி அரிசி),
24.water (தண்ணீர்).                                       
                                                                               



செய்முறை :


முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்துக்கொள்ளவேண்டும் பிறகு 7 அல்லது 8 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும், எண்ணெய் காய்ந்தவுடன் பிரியாணி இலை,அன்னாசி பூ,இலவங்கப்பட்டை,கிராம்பு,ஏலக்காய்,உலர்ந்த கோபோக் மொட்டுகள்,பெருஞ்சீரகம் விதைகள் இவை அனைத்தும் எண்ணெய்ல் போட்டுக் கொள்ளவும் நன்கு பொன்னிறமாக வதக்கவும் ,வதக்கிய பிறகு அதனுடன் சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை போடவும் வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதக்கவும். வதக்கிய பின்பு நறுக்கிய தக்காளியை போட்டு கொள்ளவும். எந்த அளவுக்கு வெங்காயம் தக்காளி வதக்கிகிறோமோ அந்தளவுக்கு பிரியாணி சுவையாக இருக்கும்.


        அடுத்து நறுக்கிமிளகாயை போடவும் அதன் பிறகு அரைத்த இஞ்சி பூண்டு விழுது போட்டு கொள்ளவும். வதக்கிய பின்பு பிரியாணி மசாலாவை போடவும் ,அதனைத் தொடர்ந்து 4 ஸ்பூன் மிளகாய்த்தூள்,
ஸ்பூன் மஞ்சத்தூள் போட்டு கொள்ளவும். பிறகு ஒரு கப்பு தயிர் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கிலோ சிக்கன் போடவும்.அடுத்து தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து கொள்ளவும். அதனைத் தொடர்ந்து ஒரு எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கொள்ளவும்.

     
பிறகு புதினா கொத்தமல்லி போடவும். போட்ட பன்பு. நன்கு மசாலா கறில ஏறு வரையில் கிளறிக் கொள்ளவும் கிளறிபன்பு தண்ணி ஊத்தணும் ரெண்டு கப் அரிசிக்கு நான்கு கப் தண்ணீர் ஊத்தணும். பிறகு அரிசியை போடவும் போட்ட பிறகு அரை வேக்காடாக அரிசி வேகும் வரை வேக வைக்கவும். வேக வைத்த பின்பு நான்கு ஸ்பூன் நெய்யை ஊற்றி கொள்ளவும்.நெய் எதனால் ஊற்றுவது என்றால் சாப்பாடு ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும் .
அரிசி அரை வேக்காடாக வெந்த பிறகு தட்டு எடுத்து மூடி , மேலே நெருப்பு போட்டு 20 நிமிடம் தம் போடவும் . 20 நிமிடம் ஆனபின்பு திறந்தால் சுவையான தம் பிரியாணி ரெடி.



நன்றி வணக்கம்

Previous
Next Post »

1 கருத்துகள்:

Click here for கருத்துகள்
Unknown
admin
7 ஆகஸ்ட், 2020 அன்று 1:03 PM ×

color full dish!!!!

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar