மிக எளிய முறையில் செய்யக்கூடிய வேர்கடலை மிட்டாய் :
மிக எளிய முறையில் செய்யக்கூடிய வேர்கடலை மிட்டாய் வெறுமனே 3 பொருளை பயன்படுத்தி வேர்கடலை மிட்டாய் செஞ்சிடலாம். வேர்க்கடலை, சர்க்கரை, நெய் இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தா போதும். வேர்க்கடலை மிட்டாய் செய்திடலாம். இதற்கு இன்னொரு பெயர் உண்டு வேர்க்கடலை பர்பி.
தேவையான பொருட்கள் :
1.வறுத்த வேர்க்கடலை ஒரு டம்ளர்.
2. முக்கால் டம்ளர் சர்க்கரை.
3. 2 ஸ்பூன் நெய்.
முதலில் வறுத்த வேர்க்கடலை மிக்ஸியில் எடுத்து இரண்டு சுற்றுகள் சுற்றி லேசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து எடுத்து வைத்திருந்த ஒரு டம்ளர் சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிண்டவும். இதில் எந்த ஒரு தண்ணீரையும் நீங்கள் ஊற்ற தேவையில்லை அதுவாகவே சூடு ஏற ஏற கரைந்து பாகு போல வந்து விடும். பின்பு அரைத்து வைத்திருந்த வேர்க்கடலை அதில் சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கிண்டவும்.
பிறகு இறக்கி விடவும் இறக்கிய பின்பு ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அந்தப் பாத்திரத்தில் நாம் செய்த வேர்க்கடலை அதில் சேர்த்து சமமாக இருக்கும்படி தட்டி செய்துகொள்ளவும். பிறகு நமக்கு எந்த ஷேப்பில் வேணுமோ அதுக்கேத்த மாதிரி நீங்கள் கட் செய்து கொள்ளலாம். 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து உங்களது வேர்கடலை மிட்டாய் தயாராகிவிடும். அதை துண்டு துண்டாக எடுத்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
இப்பொழுது வேர்க்கடலை பர்ஃபி ரெடி ஆகிவிட்டது இதை நீங்கள் வீட்டில் செய்து பாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் கடைகளில் வாங்குவதற்கு பதிலாக இப்படி நீங்கள் வீட்டிலே செய்வது மிக எளிது.
இதை நீங்க வீடியோ வடிவில் பார்க்க கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து பார்க்கவும்.
நன்றி வணக்கம்
ConversionConversion EmoticonEmoticon