Kendai Meen fish gravy recipe | கெண்டை மீன் குழம்பு
Ingrediants:
1.Catla (Bengal carp) Fish (கெண்டை மீன்)2. Turmeric Powder (மஞ்சள் தூள்),
3.Chilli Powder (மிளகாய்த்தூள்),
4.Oil (எண்ணெய்),

6.Onion (வெங்காயம்),
7.Tomato (தக்காளி),
8.Salt (உப்பு),
9.Tamarind (புளி),
10.Thalippu Vengaya Vadagam (தாளிப்பு வெங்காய வடகம்).
செய்முறை:
கெண்டை மீன் குழம்பு செய்வது எப்படி
கெண்டை மீனை எடுத்து துண்டுதுண்டாக வெட்டிக் கொள்ளவும், உப்பு மஞ்சள் இரண்டையும் சேர்த்து கழுவிக்கொள்ள வேண்டும், ஏன் என்றால் மீன்களில் உள்ள அழுக்குகளை நீக்கிவிடும். இரண்டு முறை அல்லது மூன்று முறை கழுவிக் கொண்டுள்ளவேம்.
பானையை வைக்கவும். பின்பு பானை சூடானவுடன் 4 கரண்டி எண்ணெயை ஊற்றவும். பின்பு ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு கொள்ளவும் அடுத்தது நறுக்கி வைத்திருந்த வெங்காயத்தை போட்டு கொள்ளவும்,பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கவும்.
பின்பு வதங்கிய பிறகு தக்காளியை போட்டு கொள்ளவும். வெங்காயம் தக்காளி எந்த அளவு வதக்கி கொள்றீங்களோ அந்த அந்தளவுக்கு கெண்டைமீன் குழம்பு ருசியாக இருக்கும்.
அதன் பிறகு கரைத்து வைத்துள்ள புளிநீர் ஊற்றவும், ஊற்றிய பிறகு தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும். அடுத்து தேவைக்கேற்ப 4 அல்லது 3 ஸ்பூன் மிளகாய்த்தூள் போட்டுக் கொள்ளவும், அதனுடன் சேர்த்து 1 ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்.நன்கு கலக்கி கொதி வந்தவுடன் மூடிக்கொள்ளவும், பிறகு 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். கொதித்த பிறகு நறுக்கி வைத்திருந்த கெண்டை மீனை உள்ளே போடவும். கெண்டை மீனு போட்டவுடன் நான்கு முதல் ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும் கெண்டை மீன் வெந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும் எண்ணெய் சூடாஆனஉடன் தாளிப்பு வெங்காய வடகம் போட்டு, பொறிந்து கொள்ளவும் பொறிந்தஉடன் குழம்புபில் போடவும். இப்பொழுது கெண்டை மீன் குழம்பு தயாராக உள்ளது.
நன்றி வணக்கம்
ConversionConversion EmoticonEmoticon