மாதுளம் பழம் ஜூஸ் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
1.இரண்டு மாதுளம் பழம்.
2.சர்க்கரை.
3.தண்ணீர்.
4.பால்.
செய்முறை :
முதலில் மாதுளம் பழத்தை எடுத்துக் நறுக்கி கொள்வோம். இதை இரண்டு விதமாக நறுக்கிப் பயன்படுத்தலாம். இரண்டு மாதுளம் பழத்தையும் எளிய முறையில் இரண்டு விதமாக அறிவது எப்படி என்று பார்க்கலாம். முதல் விதம் எப்படி நறுக்குவது என்று பார்க்கலாம். மாதுளம்பழத்தில் நடுவில் இரண்டு பகுதியாக நறுக்கிக் கொள்ள வேண்டும் அதனைத் தொடர்ந்து குழிகரண்டி எடுத்து நறுக்கின மாதுளம் பழத்தை சுற்றிலும் தட்டினாள் மாதுளம் பழத்தில் இருக்கும் முத்துக்கள் கீழே இறங்கி விடும்.
அடுத்தபடியாக இரண்டாவது முறை இப்பொழுது நாம் பார்ப்போம் மாதுளம்பழத்தில் அடியிலிருக்கும் காம்பு பகுதியை தனியாக அறிந்து எடுத்து விடவும் மாதுளம்பழத்தை நேராக வைத்து நான்கு பக்கமும் வெட்டி அதை பூப்போல விரித்து எடுத்துக்கலாம்.
எடுத்த மாதுளம் பழ முத்துக்களை எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து கொள்வோம் அதில் நீங்கள் எதுவும் தண்ணீர் ஊற்ற தேவையில்லை ஏனென்றால் அதிலேயே தண்ணீர் இருப்பதால் நீங்கள் ஊற்ற தேவையில்லை சிறிது நேரம் அரைத்த பிறகு அதில் பால் சேர்த்து அரைத்துக் கொள்வோம் பின்பு அதை வடிகட்டி ஒரு கிளாஸில் எடுத்துக் கொள்வோம் இப்போ மாதுளம் பழம் ஜூஸ் ரெடி.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தக் கூடிய ஒரு எளிய பானமாக இருக்கிறது இந்த மாதுளம்பழம் ஜூஸ். இந்த மாதுளம்பழம் ஜூஸ் இருதயத்திற்கு நன்மை விளைவிக்கின்றன, அதனால் இருதய கோளாறு உள்ளவர்கள் அனைவரும் இதை தினமும் எடுத்துக்கொள்ளலாம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும்.
இதை நீங்க வீடியோ வடிவில் பார்க்க கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து பார்க்கவும்.
நன்றி வணக்கம்.
ConversionConversion EmoticonEmoticon