இப்படி தக்காளி சட்னி செஞ்சு பாருங்க பத்து இட்லி கூட சாப்பிடலாமா போல |Tomato chutney

இப்படி தக்காளி சட்னி செஞ்சு பாருங்க  பத்து இட்லி  கூட சாப்பிடலாமா போல |
Tomato chutney 

Ingredients :

1.Tomato (தக்காளி)                                     
2.Garlic ( பூண்டு)
3.Red Chili (சிவப்பு மிளகாய்)
4.Oil (எண்ணெய்)
5.Mustard (கடுகு)
6.Asafoetida (பெருங்காயத்தூள்)
7.curry Leaves (கருவேப்பிலை)






செய்முறை :


முதலில் தக்காளி தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்வோம். பிறகு ஒரு மணி நேரம் ஊற வைத்த மிளகாயை எடுத்துக்கொள்வோம் . எதனால் ஊறவைத்ததோம் என்றால் அப்பொழுதுதான் மிளகாயில் வண்ணம் மாறாமல் அப்படியே கிடைக்கும்.


பிறகு தேவையான அளவு பூண்டை எடுத்துக் கொள்ளவும். தக்காளி பூண்டு காய்ந்த மிளகாய் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு அடுப்பில் கடாயை வைத்து, கடாய் சூடானவுடன்
எண்ணெய் ஊற்றி கொள்வோம். என்னை சூடானதும் சிறிதளவு கடுகு சேர்த்து, கடுகு பொரிந்தவுடன் தேவையான அளவு கருவேப்பிலை சேர்த்து கொள்ளவும் .


பிறகு அரைத்த தக்காளி சட்னியை அதில் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.
அதாவது பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும் கொதித்த பிறகு இப்போது உங்களுக்கு சுவையான தக்காளி சட்னி ரெடி.


இதை நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, புரோட்டா, இடியாப்பம், கோதுமை தோசை, ரவா தோசை, ஆகிய உணவுகளில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.நீங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

இதை நீங்க வீடியோ வடிவில் பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கலாம்



                                             
                                                      நன்றி வணக்கம்






Previous
Next Post »