தேங்காய் பர்பி செய்வது எப்படி?,How to make thengai burfi in tamil

Thengai Burfi | Thengai cake | Diwali sweets | coconut burfi | தேங்காய் பர்பி


தமிழ் தமிழா இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம் தேங்காய் பயன்படுத்தி நம்ம தேங்காய் பர்பி செய்ய போறோம். தேங்காய் பர்பி செய்ய தேவையான பொருட்கள்.




Ingredients:

1.Ghee (நெய்).
2.Coconut mill (தேங்காய் துருவல்).
3.Sugar (சர்க்கரை).
4.Water (தண்ணீர்).
5.cardamom powder (ஏலக்காய்த்தூள்).
6.Peanut (நிலக்கடலை).
7.casew nuts (முந்திரி பருப்பு).

செய்முறை :

முதலில் அளவு பார்த்துவிடலாம் ஒரு கப் தேங்காய் எடுத்துக் கொள்ளவும் .ஒரு (1) கப் தேங்காய் 1/4 கால் கப் சர்க்கரை பயன்படுத்திக்கலாம்.

அடுத்து அடுப்பில் கடாயை வைத்து கொள்ளவும் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றவும் நெய் சூடானவுடன் துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு கொள்ளவும். சேர்த்த பிறகு மிதமான தீயில் வறுக்கவும் அதிகமானால் உங்களுக்கு கலர் மாறிவிடும் அதாவது சிகப்பு கலர் வந்து விடும் மிதமான தீயில் பார்த்துக் கொள்ளவும். தேங்காயில் உள்ள தண்ணீர் இழுத்தவுடன் இறக்கிக் கொள்ளவும்.

அடுத்து மறுபடியும் அடுப்பில் கடாயை வைத்து 1/3 முக்கால் கப் சக்கரை போட்டு 1/2 அரை கப் தண்ணீர் ஊற்றவும். சர்க்கரை கரைந்து சர்க்கரை கரைந்து பாகாக மாறிவிடும் . நன்கு கொதிக்கவைத்து தொட்டுப்பார்த்தால் பிசி பிசி என்ற இருக்கும் அதுதான் கரெக்டான பதம். பாகு சுருண்டு வந்ததும் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்துக் கொள்ளவும்.



அதனைத் தொடர்ந்து 10 ஏலக்காயை எடுத்து அம்மியில் சர்க்கரை போட்டு பொடி பண்ணி எடுத்து வைத்துக்கொள்ளவும் எடுத்து வைத்ததை தேங்காயில் சேர்த்துக்கொள்ளவும். அடுத்ததாக வறுத்த வேர்க்கடலையை எடுத்து அம்மியில் 1 to 3 ஆக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நசுக்கின வேர்க்கடலையை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். சேர்த்த பிறகு ஐந்து அல்லது பத்து நிமிடம் கிண்டி கொண்டே இருக்கவும். தேங்காய் சுற்றி பபுள்ஸ் வந்துவிட்டால் வெந்து விட்டது என்று அர்த்தம்.தேங்காய் மற்றும் சர்க்கரை பாகு பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு சுருண்டு வரும்வரை கிண்டிக் கொள்ளவும். சுருண்டு வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்.

அடுத்து சமமான பாத்திரம் எடுத்து சமமாக நெய் ஊற்றி பாத்திரம் ஃபுல்லா படும்படி தடவிக் கொள்ளவும் ,ஏனென்றால் பர்பி வெட்டும்போது பாத்திரத்தில் ஒட்டாது. அடுத்து சுருண்டு வந்த தேங்காவை, நெய் ஊற்றிய பாத்திரத்தில் போட்டு சரிசமமாக தட்டிக் கொள்ளவும். ட்டின பிறகு மிதமான சூட்டில் வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

அதனைத் தொடர்ந்து முந்திரியை நெய்யில் போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். வறுத்த முந்திரியை ஒரு ஒரு தேங்காய் பர்ஃபிலும் வைக்கவும். இப்பொழுது தேங்காய் பர்ஃபி ரெடி சுவைத்துப் பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் இதை நீங்க வீடியோ வடிவேல் பார்க்க கீழே உள்ள வீடியோவை க்ளிக் பண்ணி பார்க்கவும்.




நன்றி வணக்கம்







Previous
Next Post »